தனுஷ் இயக்கத்தில் அஜித்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தனுஷ் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. 

தனுஷ் இயக்கத்தில் அஜித்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பது மட்டுமில்லாமல் சில படங்களை இயக்கியும் இருக்கிறார். அவர் இயக்கிய 'பவர் பாண்டி' சுமாரான வெற்றியை பெற்றது. 2ஆவதாக தனுஷ் இயக்கிய 'ராயன்' ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இவரது இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதனை தொடர்ந்து இட்லி கடை என்ற படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், தனுஷ் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. 

அதாவது, அஜித், தனுஷ் காம்போவில் புதிய படம் உருவாக உள்ள தகவல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்த தகவல்களால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT