நீர்கொழும்பு - மினுவாங்கொடை வீதியில் இடம்பெற்ற விபத்து: 18, 19 வயது இளைஞர்கள் உயிரிழப்பு

விபத்தையடுத்து அந்த இடத்தில் திரண்ட ஒரு குழுவினர், விபத்துக்குள்ளான பிரைம் மூவர் வாகனத்துக்குத் தீ வைத்துள்ளனர். 

நீர்கொழும்பு - மினுவாங்கொடை வீதியில் இடம்பெற்ற விபத்து: 18, 19 வயது இளைஞர்கள் உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

கட்டுநாயக்க, பொலவத்த (Bolawalana) பகுதியில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 

கொள்கலன் தளம் ஒன்றுக்குள் பின்னோக்கிச் செலுத்தப்பட்ட ஒரு பிரைம் மூவர் (Prime mover) ரக வாகனத்தின் பின்புற இழுவைப்பெட்டியில், அதிவேகமாக வந்த இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

விபத்தில் நீர்கொழும்பு, தகோன்ன பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய தலிஷ நிம்னெத் சிரிவர்தன (Thalisha Nimneth Siriwardena) மற்றும் 19 வயதுடைய கவிந்து ஹஷான் சோமதிலக்க (Kavindu Hashan Somathilaka) ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்தையடுத்து அந்த இடத்தில் திரண்ட ஒரு குழுவினர், விபத்துக்குள்ளான பிரைம் மூவர் வாகனத்துக்குத் தீ வைத்துள்ளனர். 

நீர்கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் கட்டுநாயக்க பொலிஸாரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தி, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தக் கோர விபத்து மற்றும் வாகனத்துக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
விபத்துச் சம்பத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 

Video : https://www.facebook.com/share/v/1FNbaGMNnt/ 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT