அஸ்வசும விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு... கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஒரு மாத காலத்துக்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
அஸ்வசும விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு... கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அஸ்வசும இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஒரு மாத காலத்துக்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 4 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறினார்.

நிவாரண விண்ணப்பம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறுகையில், "விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் இணைய முறையின் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதலாக, பிரதேச செயலகங்களில் உள்ள சிறப்பு பிரிவுகளுக்கும் வழங்கலாம். 

ஒரு மாதத்திற்கு விண்ணப்பங்களை கோருவோம்.  தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஜூலை மாதம் உதவிகள் வழங்கப்படும்” என்றார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -