வேன் மீது லொறி மோதி மணமகன் உள்பட 9 பேர் பலி

விபத்தில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

வேன் மீது லொறி மோதி மணமகன் உள்பட 9 பேர் பலி
ADVERTISEMENT
ADVERTISEMENT

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் பாபர்லோய் பகுதியில் இருந்து ஒரு மினிவேன் புறப்பட்டது. அதில் திருமண விழாவுக்காக மணமகன் வீட்டார் சென்று கொண்டிருந்தனர். 

கோட்கியில் உள்ள சுக்கூர்-முல்தான் நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி எதிரே வேகமாக வந்த ஒரு லொறி மீது மோதியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த கோர விபத்தில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர்  லொறி சாரதியை கைது செய்தனர். திருமணத்துக்கு சென்ற நிலையில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT