வறிய குடும்பங்களுக்கு 20ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு: சஜித் அறிவிப்பு

சேருவவில பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,  தமது ஆட்சியின் கீழ் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

வறிய குடும்பங்களுக்கு 20ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு: சஜித் அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில் உள்ள அனைத்து வறிய குடும்பங்களுக்கும் மாதாந்தம் இருபதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சேருவவில பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,  தமது ஆட்சியின் கீழ் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், சனசவிய, சமுர்த்தி மற்றும் அஸ்வெசும உள்ளிட்ட சமூக நலன்புரித் திட்டங்களில் காணப்படும் குறைபாடுகள் நீக்கப்பட்டு, அதில் உள்ள நல்ல பண்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய புதிய திட்டம் உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய திட்டத்தின் கீழ் இரண்டு வருடங்களில் வறுமையை ஒழிக்க முடியும் என சஜித் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT