பலாங்கொடை- ஹட்டன் பிரதான வீதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

பலாங்கொடை- ஹட்டன் பிரதான வீதியில் கெசல்கொட்டுவ பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை- ஹட்டன் பிரதான வீதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

பலாங்கொடை- ஹட்டன் பிரதான வீதியில் கெசல்கொட்டுவ பகுதியிலிருந்து  ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (18)  மாலை அப்பகுதியில் உள்ள வயலுக்கு நீர் திறந்து விட சென்ற ஒருவர், சடலம் தொடர்பில்,  பின்னவல பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

 இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்ததுடன், உயிரிழந்தவர் கெசல்கொட்டுவ பகுதியை சேர்ந்த  72 வயதுடைய கருப்பன் சுப்ரமணியம் என  அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் கால் தவறி  20 அடி பள்ளத்தில் விழுந்து  உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர் மது போதையில், அவ்வீதியில் நடந்து சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT