இந்த வாரம் இந்த 4 திகதிகளில் பிறந்தவர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப் போகுது!

நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.

Sep 24, 2023 - 17:58
இந்த வாரம் இந்த 4 திகதிகளில் பிறந்தவர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப் போகுது!

நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.

இன்றைய காலக்கட்டத்தில், ஜோதிடத்தில் இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து, மனப்பான்மை எண், வாழ்க்கைப் பாதை எண் மற்றும் பிறப்பு எண் ஆகிய மூன்று எண்களையும், அதுவே பெயரிலிருந்து பெறப்படும் எண்களில் இருந்து, ஆன்மாவின் சக்தி எண் மற்றும் ஆளுமை எண் ஆகியவற்றையும் அறியலாம்.

மேலும், ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமான என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை உருவாக்கும். சரி, இப்போது 24 செப்டம்பர் 2023 முதல் 30 செப்டம்பர் 2023 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

எண் 1

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் நிற பணத்தை சம்பாதிப்பார்கள். பணப் பிரச்சனைகள் தீர்க்கப்படும். நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து நற்செய்திகளைப் பெறலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதனால் இந்த வாரத்தில் உங்கள் வேலையை சிறப்பாக செய்வீர்கள்.

எண் 2

2,11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் பிஸியாக இருப்பார்கள். பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதிக மன அழுத்தத்தை உணரக்கூடும். வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய சிக்கல்களை சந்திப்பீர்கள். பண விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். உங்கள் நடத்தையால் உறவுகளில் மனக்கசப்புகள் அதிகரிக்கும்.

எண் 3

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரமானது மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். எந்த வேலையைத் தொடங்கினாலும், அதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.

எண் 4

4,13, 22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்குரிய எண் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இதனால் உங்களின் வேலைகள் மோசமாக பாதிக்கப்படும். பல முக்கியமான வேலைகள் முடிக்கப்படாமல் போகும். அதற்காக கவலை கொள்ள தேவையில்லை. ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். பண விஷயத்தில் இந்த வாரம் செலவுகள் அதிகமாக ஏற்படும். பழைய கடனை திருப்பி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

எண் 5

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் பண விஷயத்தில் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். இருப்பினும் பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். சொத்து தொடர்பான வழக்குகள் நடந்து கொண்டிருந்தால், இந்த வாரத்தில் முக்கியமான முடிவுகளை பெறுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேண வேண்டும். தேவையற்ற சண்டைகளைத் தவிர்க்க வேண்டும்.

எண் 6

6,15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரத்தில் பணியிடத்தில் மாற்றம் ஏற்படும். சில புதிய சவால்களை சந்திக்கக்கூடும். ஆயினும் முழு நம்பிக்கையுடனும் கடின உழைப்புடனும் உழைக்க வேண்டும். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மற்றவர்களின் அறிவுரையின் பேரில் எதையும் இந்த வாரத்தில் செய்யாதீர்கள். குடும்ப உறுப்பினர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.

எண் 7

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 7. இந்த எண்ணிற்கு உரியவர்கள் இந்த வாரத்தில் சிறப்பான வெற்றியைக் காண்பார்கள். மாணவர்கள் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வலுவாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானதாகவும், முன்னேற்றத்தைத் தரக்கூடியதாகவும் இருக்கும்.

எண் 8

8,17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 8. இந்த எண்ணைச் சேர்ந்தவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். அதுவும் வியாபாரிகளுக்கு நல்ல பண ஆதாயம் கிடைக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் பண பரிவர்த்தனைகளை செய்ய வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாகும். குடும்பத்தின் தேவைகளையும் நீங்கள் முழுமையாக பூர்த்தி செய்வீர்கள்.

எண் 9

9,18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 9. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். அதுவும் வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்களைத் தருவதாக இருக்கும். முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். இந்த வாரம் காதல் நிறைந்ததாக இருக்கும். இந்த வாரத்தில் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...