திங்கள் முதல் வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்... மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

தெரிவு செய்யப்பட்டுள்ள 15 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு மத்தியில் உண்மையான தகவல்கள் உறுதி செய்யப்பட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாத கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

ஆகஸ்ட் 27, 2023 - 22:48
திங்கள் முதல் வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்... மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

தெரிவு செய்யப்பட்டுள்ள 15 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு மத்தியில் உண்மையான தகவல்கள் உறுதி செய்யப்பட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாத கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

குறித்த கொடுப்பனவு, திங்கட்கிழமை வங்கிகளில் வரவு வைப்பதற்கு நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை(29.08.2023) பயனாளிகள் வங்கிகளில் பணத்தினை பெற முடியும் என அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் கணக்கை ஆரம்பித்த பயனாளிகளுக்கு அரசு வங்கிகள் மூலம் பணம் வழங்கப்படும்.

நலன்புரி சபைத் தலைவராக இருந்த ஜி. விஜேரத்ன இராஜினாமா செய்ததால், நிதி விடுவிப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

எனினும், புதிய தலைவராக ஜயந்த விஜேரத்ன பதவியேற்றதையடுத்து, பணம் விடுவிப்பது தொடர்பில் எழுந்திருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 

இதேவேளை, தகவல்கள் விரைவாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், மீதமுள்ள பயனாளிகளுக்கும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு நலன்புரி கொடுப்பனவு வங்கி கணக்கிற்கு கிடைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டு இருந்தால் கீழே உள்ள பெயர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என உறுதிப்படுத்துங்கள்

உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள பெயர் பட்டியில் உங்கள் கிராம சேவகர் பிரிவு கொடுப்பதன் மூலம் பார்வையிட முடியும்.

பெயர் பட்டியல்

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!