வானிலை முன்னறிவிப்பு: இன்று பிற்பகல் வேளையில் பலத்த மழை

மேலும், மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

வானிலை முன்னறிவிப்பு: இன்று பிற்பகல் வேளையில் பலத்த மழை
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் பல பகுதிகளில் இன்று (4) மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 100மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் மக்களை கேட்டுக்கொள்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT