இணையத்தில் வைரலாகும் அர்ச்சனாவின் புகைப்படம்

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பட்டமா பொய் சொல்லாதீங்க அது நீங்களா என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஜனவரி 5, 2023 - 20:26
இணையத்தில் வைரலாகும் அர்ச்சனாவின் புகைப்படம்

தொகுப்பாளினி, வெள்ளித்திரை நடிகை என பன்முகத்திறமைகளுடன் வலம் வருபவர் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில காலம் விஜய் டிவியில் பணியாற்றிய இவர் மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்று விட்டார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அர்ச்சனா தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பட்டமா பொய் சொல்லாதீங்க அது நீங்களா என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!