விஜய்யின் 'தி கோட்' திரைப்படம் வெளியானது: ரசிகர்கள் கொண்டாட்டம்

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.

விஜய்யின் 'தி கோட்' திரைப்படம் வெளியானது: ரசிகர்கள் கொண்டாட்டம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.

இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

டிஏஜிங் (de-aging) தொழில்நுட்பத்தின் மூலம் விஜய்யின் இளமையான தோற்றம் காணப்படும் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான டிரைலர் படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.

இன்று அதிகாலை 4 மணிக்கு கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் முதல் காட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையரங்குகளில் இடம்பெறவுள்ளது.

அதிகாலை முதலே திரையரங்குகள் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டங்கள், பட்டாசுகள், ஆரவாரங்களால் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, மொத்தமாக தமிழ் சினிமாவில் இன்னுமொரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT