நண்பர்களுடன் சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி

உயிரிழந்த சிறுவன் சில நண்பர்களுடன் கலா ஓயாவிற்கு அருகில் உள்ள தேவாலயத்திற்கு செல்வதாக பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளது.

நண்பர்களுடன் சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி
ADVERTISEMENT
ADVERTISEMENT

நொச்சியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலா ஓயாவில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை (01) சிறுவன் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சாலியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் சில நண்பர்களுடன் கலா ஓயாவிற்கு அருகில் உள்ள தேவாலயத்திற்கு செல்வதாக பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளது.

கலாஓயில் நீராடச் சென்ற வேளையில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT