கர்ப்பிணியான தங்கை - சகோதரன்  கைது 

இளைய சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்ப்பமடைய செய்த குற்றச்சாட்டில் சகோதரனை கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பிணியான தங்கை - சகோதரன்  கைது 
ADVERTISEMENT
ADVERTISEMENT

இளைய சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்ப்பமடைய செய்த குற்றச்சாட்டில் சகோதரனை கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் அச்சுவேலியை சேர்ந்த 22 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சுகவீனம் காரணமாக யுவதி கடந்த நவம்பர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அங்கு அவரை பரிசோதித்த போது, அவர் கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை நடத்தி அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதன் பின்னர் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று முன்தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT