யுவதியின் சடலத்தை தோண்டி நிர்வாணமாக்கி வீசிய கொடுமை

சடலத்தின் ஆடைகளை முழுமையாக அகற்றி நிர்வாணமாக விட்டுச்​ சென்றுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனவரி 7, 2024 - 18:54
ஜனவரி 7, 2024 - 19:03
யுவதியின் சடலத்தை தோண்டி நிர்வாணமாக்கி வீசிய கொடுமை

நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த யுவதியின் சடலம் புதைக்கப்பட்ட பின்னர் சடலத்தை சவக்குழியில் இருந்து மீண்டும் தோண்டி​ எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  சடலத்தின் ஆடைகளை முழுமையாக அகற்றி நிர்வாணமாக விட்டுச்​ சென்றுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பதுலுகஸ்தான பகுதியைச் சேர்ந்த  24 வயதுடைய யுவதி கடந்த புதன்கிழமை (03) உயிரிழந்துள்ளார்.

மத சடங்குகளுக்கு பிறகு யுவதியின் சடலம் மறுநாள் (04) புதைக்கப்பட்டது. அந்த யுவதிக்கு ஞாயிற்றுக்கிழமை (7) பிறந்த நாளாகும்.

இந்நிலையில், அந்த யுவதியின் தந்தை கல்லறைக்குச் சென்ற போது, அங்கு ​​தனது மகளின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு ஆடைகள் இன்றி நிர்வாணமாக இருந்ததை கண்டுள்ளார்.

இதனையடுத்து, இது தொடர்பில் பண்டாரவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- ஆரியவன்ச

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!