மலரவுள்ள குரோதி வருடத்தின் சுப‍ நேர விபரங்கள்: முழுமையான தகவல்

அந்த வகையில் வரும் சித்திரை முதல் நாளில் ஸ்ரீ சோபகிருது ஆண்டு முடிந்து புதிய ஸ்ரீ குரோதி வருடம் தொடங்குகிறது.

மலரவுள்ள குரோதி வருடத்தின் சுப‍ நேர விபரங்கள்: முழுமையான தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பிறக்க உள்ள புதிய குரோதி வருடத்தின் சுப நேரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். 

அந்த வகையில் வரும் சித்திரை முதல் நாளில் ஸ்ரீ சோபகிருது ஆண்டு முடிந்து புதிய ஸ்ரீ குரோதி வருடம் தொடங்குகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குரோதி வருடத்தின் முதல் நாளில் சூரியனின் கட்டத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 14 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை சஷ்டி திதியில் திருவாதிரை நட்சத்திரம் கூடிய சிறப்பான நேரத்தில் மிதுன ராசி அதிகண்ட யோகத்தில் புதிய வருடத்தின் முதல் நாள் தொடங்குகிறது.

குரோதி வருடப்பிறப்பு

சித்திரை புத்தாண்டு 'குரோதி' வருடமானது இன்று (13) சனிக்கிழமை பூர்வபக்ஷ ஷஷ்டி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம், சோபனம் நாமயோகம், கவுலவக்கரணம், துலாம் லக்னம், மிதுன நவாம்சம், சனி காலவோரை, தாமதகுணவேளை சேர்ந்த முன்னிரவு 8 மணி 15 நிமிட நேரமளவில் பிறக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

விஷு புண்ணியகாலம்

13.04.2024 சனிக்கிழமை பிற்பகல் 04.15 மணி முதல் நள்ளிரவு 12.15 மணி வரை.

சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள், சித்திரை, விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களை கொண்டோர் தவறாமல் மருத்துநீர் ‍தேய்த்து ஸ்நானம் செய்து, தான, தர்மம் செய்து, சங்கிரம தோஷ நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.

குரோதி வருட பலன்கள்

இந்த வருடத்தில் முன்மழை அதிகமாகும். பின்மழை மத்திமமாகும். உணவுப் பொருள் விருத்திகள், விவசாயம், கைத்தொழில் போன்றவற்றில் லாபங்கள் அமையும். அரச சேவை திருப்திகரமானதாக அமையும். கல்வி மேன்மைகள் சிறப்படையும். பொருட்களின் விலை அதிகமாக அமையும்.அரசியலில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்.

கைவிஷேட நேரங்கள்

14.04.2024 சித்திரை 1ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 07.57 மணி முதல் 09.56 மணி வரை. காலை 09.59 மணி முதல் நண்பகல் 12.01 மணி வரை. மாலை 06.17 மணி முதல் இரவு 08.17 மணி வரை. 

புது வியாபாரம் ஆரம்பிக்கும் நேரங்கள்

15.04.2024 திங்கட்கிழமை காலை 09.08 மணி முதல் 09.51 மணி வரை. காலை 09.55 மணி முதல் 10.30 மணி வரையாகும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT