தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட மாணவர்கள், நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள், பிள்ளைகளை பரிசோதித்தபோது அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலி நிறைந்த காயம் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டனர்.
யாசகர், பஸ் தரிப்பிடத்தில் தங்கி இருந்து யாசகம் பெறுபவர் எனவும் வழமை போன்று காலை கடனை கழிப்பதற்கு குளக்கட்டை நோக்கி சென்றிருந்த நிலையில், இவ்வாறு யானை தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை
குறித்த சான்றுப் பொருளை பார்வையிட அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு நீதவான் சென்ற வேளையில், ஆட்டிறைச்சி, மூட்டையில் கட்டி பெக்கோ இயந்திரத்தில் புதைப்பதற்கு தயாராக வைத்திருந்ததை அவதானித்துள்ளார்.
சுறா மீன் ஒரு கிலோகிராம் 2,500 ரூபாயாகவும் வளையா மீன் ஒரு கிலோகிராம் 1,500 ரூபாயாகவும் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகளில் வைத்து மீனவர்களால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று நடைபெற்றது.
தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய முயன்ற தந்தை காப்பாற்றப்பட்டுள்ளார்.
கைதானவர்களின் வாக்குமூலத்தின் படி, வைத்தியசாலைகள் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களை பிரதானமாக இலக்கு வைத்து, சக நோயாளர்களாகவும் சிற்றூழியர்களாகவும் நடித்து, சூட்சுமமாக அலைபேசிகளை திருடியுள்ளனர்.
யுத்த சூழ்நிலை காரணமாக 1987ஆம் ஆண்டு, அம்பாறை - கனகர் கிராமத்தில் இருந்து இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இங்கினியாகலயிலுள்ள பாடசாலையொன்றில் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் இரு மாணவிகளும் இந்த வருடம் க.பொ.த பொதுப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இரு மாணவிகளும் 16 வயதுடையவர்கள் எனவும் இருவரும் தோழிகள் என பொலிஸார் கூறுகின்றனர்.