பாடசாலை மாணவிகள்  இருவர் மாயம்!

இரு மாணவிகளும் 16 வயதுடையவர்கள் எனவும் இருவரும் தோழிகள் என பொலிஸார் கூறுகின்றனர்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
பாடசாலை மாணவிகள்  இருவர் மாயம்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அம்பாறை, இங்கினியாகலை பொல்வத்த பிரதேசத்தில் பாடசாலை மாணவிகள் இருவர் காணாமல் போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடு  தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இரு மாணவிகளும் 16 வயதுடையவர்கள் எனவும் இருவரும் தோழிகள் என பொலிஸார் கூறுகின்றனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பாடசாலைக்கு செல்வதாக கூறிய மாணவி ஒருவர், மற்றைய மாணவியின் வீட்டிற்கு கடந்த 15ஆம் திகதி சென்றுள்ளார்.

இதனையடுத்து, இரு மாணவிகளும் தாங்கள் பயிற்சி வகுப்புக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறித்த சிறுமிகள் இருவரும் வீடு திரும்பாத நிலையில், அவர்களில் ஒருவரின் பாட்டி இங்கினியாகல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதனையடுத்து, இங்கினியாகல பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையில்,  வீட்டை விட்டு வெளியேறிய மறுநாள், மற்றொரு நண்பருக்கு போன் செய்து, இருவரும் கொழும்பில் இருப்பதாக அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நண்பரிடமும் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -