துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேகநபர் கைது

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிநாட்டில் வசித்து வரும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவரின் நெருங்கிய தொடர்பாளராக அவர் இருப்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேகநபர் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

துப்பாக்கி ஒன்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நேரடி கைக்குண்டு ஒன்றும் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர், மனிதக் கொலைகள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை, மீகலேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலன்கமுவ பகுதியில் நேற்றிரவு (20) மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர், கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவராவார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் ரி-56 ரக துப்பாக்கி ஒன்றுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டிருந்தவர் எனவும், தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிநாட்டில் வசித்து வரும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவரின் நெருங்கிய தொடர்பாளராக அவர் இருப்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மனிதக் கொலைகள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT