திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு - சந்தேக நபரிடம் விசாரணை 

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு - சந்தேக நபரிடம் விசாரணை 
ADVERTISEMENT
ADVERTISEMENT

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் 8 இலட்சத்திக்கும் அதிக பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக  பொலிஸ் நிலையத்தில்   கடந்த   ஜனவரி மாதம் 14ஆம் திகதி   முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த முறைப்பாட்டிற்கமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்  வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரின் பலன்  விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது  அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து மோட்டார்  சைக்கிளை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மீட்டதுடன்  சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

(பாறுக் ஷிஹான்)

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT