சொகுசு பஸ்ஸை வழிமறித்து அதன் சாரதி மற்றும் நடத்துனரைத் தாக்கிய ஆறு பேர் கைது
களுத்துறை – கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள நாகஸ் சந்திப்பில், சொகுசு பஸ் ஒன்றை வழிமறித்து, அதன் சாரதி மற்றும் நடத்துனரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 06 சந்தேக நபர்களைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள்களில் வந்த சந்தேக நபர்கள், பஸ்ஸை வழிமறித்து அதன் சாரதியையும் நடத்துனரையும் தாக்கியுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையம் களுத்துறை வடக்கு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வடுவ மற்றும் மொரொந்துடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சந்தேக நபர்கள், களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இச்சம்பவம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.