சில பகுதிகளில் காலை வேளையில் திடீர் மழை 

கிழக்கு மாகாணத்தில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் மற்றும் ஏனைய பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

சில பகுதிகளில் காலை வேளையில் திடீர் மழை 
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் மற்றும் ஏனைய பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மி.மீ. 75 வரை பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT