மழையுடனான வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாவட்டத்தில் சில இடங்களிலும் அதிகபட்சமாக 75 மி.மீ.  கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மழையுடனான வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வட மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாவட்டத்தில் சில இடங்களிலும் அதிகபட்சமாக 75 மி.மீ.  கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது 30-40 கிலோமீற்றர் வரை காற்று வீசும்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT