நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை!

இலங்கையில் தொடரும் கனமழையால் நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளின் விபரங்கள்.

நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை!
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை மற்றும் கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவுக்கான சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று திங்கட்கிழமை (26) மாலை 04 மணியளவில் வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதன்படி, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் குறிப்பிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டம்:
அம்பகமுவ கோரள மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவுகள்.

இரத்தினபுரி மாவட்டம்:
குருவிட்ட, எலபாத, அயகம, ஓபநாயக்க, பெல்மதுளை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

களுத்துறை மாவட்டம்:
புளத்சிங்கள மற்றும் தொடங்கொடை பிரதேச செயலாளர் பிரிவுகள்.

குறித்த பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும், மலைச்சரிவுகளில் மண் வெடிப்புகள், நிலத்தில் திடீர் மாற்றங்கள் மற்றும் மரங்கள் அல்லது மின்கம்பங்கள் சாய்தல் போன்ற மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று அதிகாரிகளுக்குத் தகவல் வழங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT