கற்பிட்டியில் அரிய வகை சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

கற்பிட்டி நகரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 20 அரிய வகை சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டியில் அரிய வகை சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

புத்தளம் - கற்பிட்டி நகரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 அரிய வகை சங்குகளுடன் சந்தேக நபரொருவர், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, குருநாகல் வனஜீவராசிகள் உதவிப் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் கற்பிட்டி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பிலேயே, இவர் கைது செய்யப்பட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

விற்பனை செய்ய முற்பட்ட வேளையில் குறித்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சங்குகள் இரண்டு அரிய வகைகளைச் சேர்ந்தவை என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இதில் 'இலங்கை வரைபட கவுரி' (Sri Lanka Map Cowries) எனப்படும் 10 கடல் சிப்பிகளும், 'புலி கவுரி' (Tiger Cowries) எனப்படும் மேலும் 10 அரிய வகை கடல் சிப்பிகளும் அடங்குகின்றன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட சங்குகள் மற்றும் சிப்பிகளையும் எதிர்வரும் 05ஆம் திகதி கற்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT