நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை 

மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை 
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்று (02) காலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல காலகட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

மேலும் பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மற்ற பகுதிகளில் அவ்வப்போது30 முதல் 40  கி.மீ. வரை காற்று வீசக்கூடும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT