போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குமூலம் வழங்குவதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இரண்டாவது நாளாக முன்னிலையானதை அடுத்து அவர் இன்று(01) கைது செய்யப்பட்டிருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனையடுத்து, அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் ஏனைய மதங்கள் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, வெளிநாட்டுக்கு சென்ற அவர், நேற்று முன்தினம் நாடு திரும்பியிருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT