கை, கால்களைக் கட்டி இளைஞர் கொலை - இருவர் சிக்கினர்

குறித்த நபரின் சடலம் கடந்த 18ஆம் திகதி ரத்கம, கிரிமதிய சுடுகாட்டுக்கு பின்னால் உள்ள பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது.

கை, கால்களைக் கட்டி இளைஞர் கொலை - இருவர் சிக்கினர்
ADVERTISEMENT
ADVERTISEMENT

COLOMBO (News21); 27 வயதுடைய இளைஞரின் கை, கால்களைக் கட்டி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபரின் சடலம் கடந்த 18ஆம் திகதி ரத்கம, கிரிமதிய சுடுகாட்டுக்கு பின்னால் உள்ள பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த நபர் கடந்த 17ஆம் திகதி மாலை நெகிவத்தை கட்டுடம்பே பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நண்பர்கள் குழுவுடன் மது அருந்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ரத்கம முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் ரத்கம, பனிவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நபர்களில் ஒருவர் இறந்தவருக்கு கடைசியாக அலைபேசி அழைப்பை செய்தவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட இருவரும் தங்களது அலைபேசி தரவுகளை அழித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர்கள் ரத்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT