சமையலறையில் தோண்ட தோண்ட  சடலங்கள் -   சிக்கிய  கொலையாளி

34 வயதுடைய குறித்த  சந்தேக நபர், இரவு விருந்தில் சந்திக்கும் நபர்களை தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சமையலறையில் தோண்ட தோண்ட  சடலங்கள் -   சிக்கிய  கொலையாளி
ADVERTISEMENT
ADVERTISEMENT

ருவாண்டா நாட்டில் உள்ள நபர் ஒருவர் தமது வீட்டின் சமையலறையில் குழியைத் தோண்டி 10க்கும் மேற்பட்ட சடலங்களைப் புதைத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

34 வயதுடைய குறித்த  சந்தேக நபர், இரவு விருந்தில் சந்திக்கும் நபர்களை தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இவ்வாறு வீட்டின் சமையலறையில் இருந்து மொத்தம் 14 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

கடந்த ஜூலை மாதத்தில் கொள்ளை, பாலியல் பலாத்காரக்  குற்றங்களுக்காக குறித்த நபர் கைது செய்யப்பட்டார். எனினும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது அவரின், வீடு சோதிக்கப்பட்டதில்  சமையலறையில் குழி தோண்டப்பட்டு அதில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. சிலரின் உடலை அவர் அமிலத்தில் கரைத்ததாகக் கூறப்பட்டது. 

கொலைசெய்யத் திட்டமிட்டவர்களைக் கண்காணித்து வந்ததாகவும் நெருங்கிய குடும்பமோ நண்பர்களோ இல்லாதவர்களைக் குறிவைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT