LEO Twitter Review: விஜய் தரமான சம்பவம்.. லியோ படத்தின் ட்விட்டர் விமர்சனம்!

LEO Twitter Review: தமிழ்நாட்டை தவிர்த்து பிற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு லியோ திரைப்படம் திரையிடப்பட்டு டிக்கெட் கிடைத்த ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் தியேட்டர்களில் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

LEO Twitter Review: விஜய் தரமான சம்பவம்.. லியோ படத்தின் ட்விட்டர் விமர்சனம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

LEO Twitter Review: தமிழ்நாட்டை தவிர்த்து பிற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு லியோ திரைப்படம் திரையிடப்பட்டு டிக்கெட் கிடைத்த ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் தியேட்டர்களில் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

லியோ திரைப்படம் எல்சியூ தான் என்பது உறுதியாகி விட்டது. இந்நிலையில், ரசிகர்கள் லியோ படத்தை பார்த்து விட்டு பதிவிட்டு வரும் விமர்சனங்களை இங்கே காணலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கைதி படத்தை பார்த்து விட்டு லோகேஷ் கனகராஜை நம்பி மாஸ்டர் படத்தை கொடுத்து லோகேஷ் கனகராஜை இந்த அளவுக்கு உச்சத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் எங்க அண்ணனுக்கு நானும் தரமா செய்வேன் என லோகேஷ் கனகராஜ் செய்துள்ள சம்பவம் தான் லியோ என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

படத்தின் முதல் பாதி பட்டாசாக இருப்பதாகவும் இதுவரை பார்த்திராத விஜய்யின் நடிப்பை லியோ படத்தில் ரசிக்கலாம் என பதிவிட்டு வருகின்றனர்.

இது ஸ்பாயிலர் தான்.. ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தின் டைட்டில் எப்படி இடைவேளையின் போது போடுவார்களோ அதே போலத்தான் லியோ படத்தின் டைட்டில் இடைவேளையில் தான் போடுகின்றனர் என ரசிகர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

லியோ படத்தில் சாண்டி மாஸ்டர் மற்றும் மிஸ்கின் நடிகர் விஜய்யின் இடத்துக்கு சென்று அவருடன் பிரச்சனை பண்ணும் போது, சண்டை நடக்கிறது. 

கடைசியாக விஜய்யின் குழந்தையை சாண்டி மாஸ்டர் வெறித்தனமாக கொல்லப் போக, துப்பாக்கி எடுத்து, மிஷ்கின் மற்றும் சாண்டியை சுட்டுத் தள்ளும் காட்சிகளை தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

டேய் பாகுபலி, டேய் ராக்கி பாய் இப்போ வாங்கடா சண்டைக்கு என விஜய் ரசிகர்கள் லியோ படத்தை பார்த்த வெறியில் ட்வீட் போட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய் சிறந்த நடிகர் என்று மட்டுமே அவரை பாராட்டும் பலர் அவரது நடிப்பை பெரிதாக பாராட்டியதே இல்லை. 

அதை உடைத்து விஜய்யின் ரியல் வெறித்தனமான நடிப்பை காட்ட வேண்டும் என துப்பாக்கியை கீழே போட்டு விட்டு விஜய் அழும் காட்சி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

லியோ படம்

விக்ரம் படத்துக்குப் பின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் “லியோ”.

இந்த படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். மாஸ்டர் படத்துக்குப் பின் இருவரும் கூட்டணி சேர்ந்துள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்படத்திற்கு நிலவியது. லியோ படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மடோனா செபாஸ்டியன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், பிரியா ஆனந்த், பாபு ஆண்டனி, மேத்யூ தாமஸ், அனுராக் காஷ்யப், அபிராமி வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள லியோ படம் இன்று உலகமெங்கும் தியேட்டரில் வெளியானது. இப்படத்திற்கு தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிட அனுமதி கிடைத்துள்ளது.

அதேசமயம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இதனால் மாநில எல்லைகளில் உள்ள ரசிகர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு படையெடுத்து சென்றனர். 

தியேட்டர் வளாகங்கள் முழுக்க பேனர்கள், கட் அவுட்கள், போஸ்டர்கள், தோரணங்கள் என விஜய் ரசிகர்கள் அமர்களப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்ட நிலையில், டிக்கெட்டுகள் வெளியில் பல மடங்கு கட்டணம் வைத்து விற்பனை செய்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. 

இப்படியான நிலையில் லியோ படம் வெளியாவதை முன்னிட்டு தியேட்டர்களில் விடிய விடிய கொண்டாட்டங்கள் களைகட்டியது. 

இதனைத் தொடர்ந்து முதல் காட்சி பார்க்க சென்ற ரசிகர்கள் தங்களுடைய  கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் ரசிகர்கள் பதிவை பார்க்கும் லியோ படம் எல்.சி.யு எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இடம் பெற்றுள்ளது தெளிவாகியுள்ளது. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT