கடைசி நேர ட்விஸ்ட்... ஜோவிகா எஸ்கேப்.. அப்போ டைட்டில் வின்னர் அவுட்டா?
ஆனால், கடைசி நேர ட்விஸ்ட்டாக ஜோவிகா இந்த வாரம் எவிக்ட் ஆக மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக இன்னொரு போட்டியாளர் தான் எவிக்ட் ஆகப் போகிறார் என தகவல்கள் கசிந்துள்ளன.
டைட்டில் வின்னர் நான் தான் என இந்த சீசனில் சுற்றிக் கொண்டு திரிந்த சரவண விக்ரம் தான் நாளை நடைபெற உள்ள பிக்பாஸ் ஷூட்டிங்கில் வெளியேறப் போவதாக அதிர்ச்சி தகவல்கள் லீக் ஆகி உள்ளன.
விக்ரமின் அத்தனை கனவிலும் இப்படி மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்களே என ரசிகர்கள் வருத்தப்படுவது போல கலாய்த்து வருகின்றனர். புல்லியிங் கேங்கின் முக்கியப் புள்ளிகள் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருவதாகவும், அதில் இருந்த வாயில்லா பூச்சிகளை தான் வெளியே அனுப்புவதாகவும் கூறுகின்றனர்.
மாயா, பூர்ணிமா, ஜோவிகாவை தொடர்ந்து காப்பாற்றுவதற்கு பின்னணியில் சில சதி வேலைகள் நடப்பதாகவும் ரசிகர்கள் சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.