காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,215 ஆக உயர்வு... இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை!

பொதுமக்கள் இன்று மாலைக்குள் காசாவில் இருந்து வெளியேற வேண்டும் என, இஸ்ரேல் விதித்த கெடுவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,215 ஆக உயர்வு... இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை!
ADVERTISEMENT
ADVERTISEMENT

பொதுமக்கள் இன்று மாலைக்குள் காசாவில் இருந்து வெளியேற வேண்டும் என, இஸ்ரேல் விதித்த கெடுவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் குழுவினர் இடையே 8வது நாட்களாக தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதுவரை, ஹமாஸ்–இஸ்ரேல் தாக்குதலில் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 3000-ஐ கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறிப்பாக இருளில் மூழ்கிய காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது, காசா பகுதியில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தண்ணீரின்றி உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளனர் என்று ஐநா கவலை தெரிவித்துள்ளது. 

இதுவரை 3.4 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு எல்லைப்பகுதியில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐநா கூறியுள்ளது.

இதற்கிடையில், லெபனானுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில், 724 குழந்தைகள் உட்பட 2,215 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸில் சேர முழுமையாக தயார் என்று ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ள நிலையில், காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் மற்ற நாடுகளுக்கும் போர் பரவும், இதனால் காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் விரைவில் நிறுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT