மத்திய கிழக்கில் மகா யுத்தம்: இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் மீது ஈரான் சரமாரி தாக்குதல்!

அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் போர்க்களமாக மாறியுள்ளதால் உலக நாடுகளிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

மத்திய கிழக்கில் மகா யுத்தம்: இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் மீது ஈரான் சரமாரி தாக்குதல்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

பல ஆண்டுகளாக நீடித்து வரும் இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் போக்கு, தற்போது ஒரு முழுமையான போராக உருவெடுத்துள்ளது. ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தங்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாகக் கருதும் இஸ்ரேலும் அமெரிக்காவும், ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு இன்று அதிரடித் தாக்குதலைத் நடத்தின. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி இஸ்ரேல் மீது கடும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதுமட்டுமின்றி, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடுகளாகக் கருதப்படும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், கத்தார், ஓமன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளையும் ஈரான் குறிவைத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அங்குள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் போர்க்களமாக மாறியுள்ளதால் உலக நாடுகளிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT