தொண்டை சளியை நொடியில் போக்க சில டிப்ஸ்
தொண்டையில் சளி கட்டிக்கொண்டால் இது நம்மை பாடாய்படுத்தும். இதனை ஒரு சில எளியவழிகள் மூலம் போக்க முடியும்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
தொண்டை சளி:
பொதுவாக பலருக்கு அடிக்கடி சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்றவை ஏற்படுவது வழக்கம்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
தொண்டையில் சளி கட்டிக்கொண்டால் இது நம்மை பாடாய்படுத்தும். இதனை ஒரு சில எளியவழிகள் மூலம் போக்க முடியும்.
ஒரு கிளாஸ் தண்ணீரை 5 நிமிடங்கள் சூடாக்கி அதில் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து வாயை 3-4 முறை கொப்பளிக்க வேண்டும். தண்ணீர் வெதுவெதுப்பான பதத்தில் இருக்க வேண்டும்.
- 1 ஸ்பூன் அதிமதுரப் பொடியை தேனில் கலந்து சாப்பிடுங்கள் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து வாயை கொப்பளித்து துப்பலாம்.
- வெற்றிலைக் கொடியின் தண்டுப் பகுதியை மட்டும் வாயில் போட்டு மென்று விழுங்க தொண்டை கரகரப்ப் நீங்கும்.
- வெற்றிலையை மைய அரைத்து அதன் சாறில் சுண்ணாம்பு குழைத்து தொண்டையில் தடவுங்கள். தொண்டை சளி நீங்கி, தொண்டை கட்டியிருந்தாலும் சரியாகும்.
- பசும்பாலுடன் 1 பூண்டு, மிளகுத்தூள், மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி குடித்து வர தொண்டை சளி கரைந்துவிடும்.
- முருங்கை இலை சாறு அல்லது குப்பைமேனி இலை சாற்றுடன் சுண்ணாம்பு குழைத்து தொண்டையில் தடவ சளி நீங்கும்.
- கற்பூர வல்லி இலையை மென்று விழுங்கினாலும் சளிக்கு நல்லது.
துளசி இலைஅல்லது இஞ்சியை கொதிக்க வைத்து அவ்வப்போது தொண்டைக்கு இதமாக இருக்க குடித்து வந்தாலே சளி கரையும்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT