ஊழியர் கொலை; வெள்ளவத்தை கடை உரிமையாளர் கைது!

குறித்த நபர், அவர் பணிபுரிந்த கடையின் உரிமையாளரால் தனிப்பட்ட தகராறு காரணமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஊழியர் கொலை; வெள்ளவத்தை கடை உரிமையாளர் கைது!
ADVERTISEMENT
ADVERTISEMENT

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (16) காலை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு - 13, ஜம்பெட்டா வீதியில் வசித்து வந்த 46 வயது நபரே கொல்லப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த நபர், அவர் பணிபுரிந்த கடையின் உரிமையாளரால் தனிப்பட்ட தகராறு காரணமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம், களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தையைச் சேர்ந்த கடை உரிமையாளரான 42 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பொலிஸ் அறிக்கை : 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT