வங்கியில் பணம் வைப்பு செய்தவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்திற்கோ ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கோ ஓய்வூதியத்திற்கோ இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கியில் பணம் வைப்பு செய்தவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

உள்நாட்டு கடன் மீள்கட்டமைப்பு நடவடிக்கையால் வங்கிக் கணக்குகளிலுள்ள வைப்புகளுக்கோ அவற்றின் வட்டி வீதங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாதென ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்திற்கோ ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கோ ஓய்வூதியத்திற்கோ இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நாடளாவிய ரீதியில் மூடப்படும் பாடசாலைகள்!  வெளியான தகவல்!

வங்கியில் பணம் வைப்பு

கடன் மீள்கட்டமைப்பு என்பது குறைப்பு செய்யும் நடவடிக்கை அல்ல. இதன்மூலம் கடனை பிற்போடுவது, கடனை குறைப்பது, கடன் செலுத்தும் கால எல்லையை நீடிப்பது போன்ற செயற்பாடுகள் இடம்பெறுவதாக ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, கடன் மீள்கட்டமைப்பு நடவடிக்கை மூலம் வங்கிக் கணக்குகளிலுள்ள வைப்புகளுக்கோ அவற்றின் வட்டி வீதங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாதென மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவும் உறுதியளித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT