கென்யாவில் அணை உடைந்ததில் 50 பேர் பலி

கென்யாவில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கென்யாவில் அணை உடைந்ததில் 50 பேர் பலி
ADVERTISEMENT
ADVERTISEMENT

கென்யாவில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து அணை ஒன்று உடைந்ததில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் நைரோபியில் இருந்து சுமார் 60 கிமீ (37 மைல்) தொலைவில் உள்ள மாய் மஹியுவுக்கு அருகிலுள்ள கிராமங்களில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சேற்றில் இருந்து மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கென்யாவில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT