அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் மற்றுமொரு புதிய அறிவிப்பு

சுமார் 689,803 அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபாய் ஏற்கெனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் மற்றுமொரு புதிய அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

சுமார் 689,803 அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபாய் ஏற்கெனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அடையாளம் காணப்பட்ட 2 மில்லியன் அஸ்வெசும பயனாளிகளில், 1.5 மில்லியன் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

‘அஸ்வெசும’ குறித்த அனைத்து விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம், வார நாட்களில் காலை 9 மணி முதல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

ஊனமுற்றோர், முதியோர், சிறுநீரக நோயாளர் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT