14 நாட்கள் நிர்வாணமாக காட்டில் திரிந்த அஞ்சான் பட நடிகர்: வெளியான புகைப்படம்!

பாலிவுட்டில் முன்னணி நடிகரான வித்யுத் ஜமால், தமிழில் துப்பாக்கி, பில்லா 2, அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

டிசம்பர் 11, 2023 - 16:31
14 நாட்கள் நிர்வாணமாக காட்டில் திரிந்த அஞ்சான் பட நடிகர்: வெளியான புகைப்படம்!

பாலிவுட்டில் முன்னணி நடிகரான வித்யுத் ஜமால், தமிழில், துப்பாக்கி, பில்லா 2, அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

இந்த நிலையில், 43 வயதாகும் இவர் ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் இப்படி இயற்கையோடு ஒட்டி வாழ்வதை வழக்கமாக வைத்துக்கொள்வதில் ஆசையாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இமய மலையின் காடுகளில் அடுப்பை பற்ற வைத்து சமைக்கும் புகைப்படங்களையும், நதியில் இறங்கி குளிக்கும் புகைப்படங்களையும் வித்யுத் ஜமால் தனது சமூக ஊடங்களில் பதிவேற்றியுள்ளார்.

இமய மலை தொடர்களில் ஒருவார காலம் தான் வாழ்ந்த வாழ்க்கையை விவரிக்கும் வகையில், மூன்று புகைப்படங்களையும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றுகிறார் என்பது பற்றியும் வித்யுத் ஜம்வால் விளக்கம் அளித்து இருக்கிறார். 

14 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் வரை வித்யுத் ஜம்வால் யார் உதவியும் இன்றி தனியாக வாழ்ந்து வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த அனுபவம் தன்னை புதிதாக பிறந்ததை போன்ற அனுபவத்தை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!