துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

தனிப்பட்ட தகராறு காரணமாக மருமகனை மாமா சுட்டுக் கொன்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ, கல்லோயா பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக மருமகனை மாமா சுட்டுக் கொன்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நேற்று (27) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த நபர் மின்னேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரொட்டவெவ, கல்ஓயா பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியுடன் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று (27) ஹிங்குராங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT