துப்பாக்கி சூட்டில் இருவர் படு காயம்

மோட்டார் சைக்கிளில் பயணித்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் இருவர் படு காயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

மாத்தறை - வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வெலிகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளரும் அதன் பணியாளர் ஒருவருமே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் தெனிபிட்டிய மற்றும் வெலிபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 52 வயதுடைய இருவரே காயமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

காயமடைந்த இருவரும் வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT