இன்றைய வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கக்கூடும்.

இன்றைய வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இன்று(29) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கக்கூடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய அளவு நீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், வெட்ட வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT