யாழ்ப்பாணத்தில் சிக்கிய ஐம்பொன் சிலை: கடத்தியவர் தப்பியோட்டம்

சிலையை கடத்தி வந்தவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சிக்கிய ஐம்பொன் சிலை: கடத்தியவர் தப்பியோட்டம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

வவுனியாவில் இருந்து திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் சிலைடி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் வைத்து திங்கட்கிழமை (30) கைப்பற்றப்பட்ட இந்த சிலையின் எடை 35 கிலோகிராம் என தெரிவிக்கப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சிலையை கடத்தி வந்தவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதிக்கு சென்ற போது அதனை கடத்தி வந்தவர் தப்பித்து சென்றுள்ளார். 

சிலை கைப்பற்றப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT