2026 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் – உங்கள் ராசிக்கான முழுமையான ஜோதிட விளக்கம்!

2026 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் : 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தொடங்கும் இந்த ஆண்டு, சனி, குரு, ராகு-கேது ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகளால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் புதிய திருப்பங்களைக் கொண்டுவரும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

டிசம்பர் 19, 2025 - 16:33
டிசம்பர் 19, 2025 - 16:34
2026 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் – உங்கள் ராசிக்கான முழுமையான ஜோதிட விளக்கம்!

2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தொடங்கும் இந்த ஆண்டு, சனி, குரு, ராகு-கேது ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகளால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் புதிய திருப்பங்களைக் கொண்டுவரும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, மார்ச் 6, மே 26 மற்றும் நவம்பர் 19 ஆகிய தேதிகளில் நிகழவுள்ள கிரக பெயர்ச்சிகள் இந்த ஆண்டின் முக்கிய திருப்புமுனைகளாக இருக்கும்.

2026 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 

மேஷம்

செவ்வாய் உங்கள் ராசிநாதனாகவும், சனி பாக்கிய ஸ்தானத்திலும் அமர்ந்துள்ளதால், உழைப்பிற்கேற்ப பலன் கிடைக்கும். புதிய சொத்து, வாகனம், முதலீடுகள் சாதகமாக இருக்கும். கடன் பளு குறையும்; சமூக அந்தஸ்து உயரும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஓரஞ்சு, சிவப்பு, வெண்மை

பரிகாரம்: ஞாயிறு கிழமைகளில் ராகு காலத்தில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும்.

ரிஷபம்

சுக்கிரன் அட்டம ஸ்தானத்தில் இருந்தாலும், சந்திரன் உச்சம் பெற்றிருப்பதால் அரசியல், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில் இருக்கும். ராகு கேது பெயர்ச்சிக்குப் பின் கேது மூன்றில் அமர்ந்து உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், நீலம்

பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சநேயர், செவ்வாய் கிழமை சுப்ரமணியர் வழிபாடு.

மிதுனம்

குரு மே மாதம் தனஸ்தானத்தில் அமர்வது உங்களுக்கு பெரும் லாபத்தைத் தரும். புதிய வேலை, தொழில், ஓன்லைன் வர்த்தகம் சிறக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், சிவப்பு

பரிகாரம்: ஞாயிறு மாலை நவகிரக வழிபாடு + பைரவருக்கு புளி சாதம்.

கடகம்

ராசிநாதன் சந்திரன் உச்சம் பெற்றுள்ளதால், நீண்ட நாள் கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆண்டாக இருக்கும். அரசியல், வேலை, தொழில் எல்லாத்திலும் முன்னேற்றம். குரு-கேது இணைவு பெரிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், நீலம்

பரிகாரம்: வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் அம்மன் வழிபாடு.

சிம்மம்

சனி அட்டம ஸ்தானத்தில் இருப்பினும், குரு மே மாதம் விரைய ஸ்தானத்தில் அமர்ந்து எதிர்பாராத லாபங்களைத் தரும். பொருளாதார நிலை மேம்படும். அரசியல் செயல்பாடுகள் சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, ஓரஞ்சு, வெண்மை

பரிகாரம்: ஞாயிறு கிழமை ஆதித்ய ஹ்ருதயம் + விநாயகர் வழிபாடு.

கன்னி

புதன் சுகஸ்தானத்திலும், குரு மே மாதம் லாபஸ்தானத்தில் உச்சம் பெற்றும் அமர்வதால் கூட்டுத் தொழில், வெளிநாட்டு வாய்ப்புகள், ஓன்லைன் வர்த்தகம் சிறக்கும். ஆயுள் காப்பீட்டு பணம் வரும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, நீலம், மஞ்சள்

பரிகாரம்: சனிக்கிழமை பைரவருக்கு எள் அன்னம் + நல்லெண்ணெய் தீபம்.

துலாம்

குரு மற்றும் சனி உங்களுக்கு சாதகமாக அமர்வதால், தொழில் வளர்ச்சி, கடன் விடுதலை, எதிரிகளின் சூழ்ச்சி தோல்வியடையும். நவம்பருக்குப் பின் அதிர்ஷ்டம் உச்சம் அடையும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், நீலம்

பரிகாரம்: செவ்வாய், வெள்ளி கிழமைகளில் அம்மன் வழிபாடு.

விருச்சிகம்

சனி பஞ்சம ஸ்தானத்திற்கும், குரு பாக்கிய ஸ்தானத்திற்கும் பெயர்வதால், நீண்ட நாள் கனவுகள் நனவாகும். திருமணம், குடும்ப சுபகாரியங்கள், பொருளாதார மேம்பாடு ஆகியவை சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஓரஞ்சு, மஞ்சள், வெண்மை

பரிகாரம்: செவ்வாய் கிழமை சுப்ரமணியர், நரசிம்மர் வழிபாடு.

தனுசு

ஆரம்பத்தில் குரு அட்டம ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதாரத்தில் கவனம் தேவை. சனி சுகஸ்தானத்திற்கு பெயர்ந்தாலும் தாயார் உடல்நிலையில் கவனம் தேவை. புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், ஓரஞ்சு, வெண்மை

பரிகாரம்: சனிக்கிழமை பைரவருக்கு சிவப்பு அரளி பூ.

மகரம்

ஏழரை சனி முடிவுக்கு வருவதுடன், குரு மே மாதம் ராசியை பார்ப்பதால் பெரும் வளர்ச்சி. திருமண தடை நீங்கும்; தொழில், கலை, பொதுவாழ்வு – எல்லாம் சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், நீலம், வெண்மை

பரிகாரம்: ஞாயிறு மாலை நவகிரக வழிபாடு + பைரவருக்கு தயிர் அன்னம்.

கும்பம்

ராசிநாதன் சனி மார்ச் முதல் தனஸ்தானத்தில் அமர்வதால் பொருளாதார நிலை மேம்படும். குரு ராசியை பார்ப்பதால் மன உறுதி, தொழில் வளர்ச்சி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெண்மை, மஞ்சள்

பரிகாரம்: சனி கிழமை பைரவர், செவ்வாய் கிழமை சுப்ரமணியர் வழிபாடு.

மீனம்

ஜென்ம சனியாக சனி மார்ச் 6 முதல் மீன ராசியில் அமர்வது உங்கள் மன வலிமையை உயர்த்தும். குரு உச்ச ஸ்தானத்தில் இருப்பதால் அனைத்துத் துறைகளிலும் நற்பலன். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், ஓரஞ்சு, வெண்மை

பரிகாரம்: ஞாயிறு மாலை பைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் + புளி அன்னம் தானம்.

மேலே கொடுக்கப்பட்ட ராசி பலன்கள் ஜோதிட கணிப்புகள் மற்றும் பொது அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை. இவை தனிப்பட்ட ஜாதக பலன்களை மாற்றாது. எந்த முக்கிய முடிவையும் எடுக்கும் முன், உங்கள் சொந்த ஜாதகத்தை ஆதாரமாகக் கொண்டு தகுதிவாய்ந்த ஜோதிட நிபுணரை கலந்தாலோசிக்கவும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!