புலமைப்பரிசில் மாணவர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

2024 பெப்ரவரி 13 முதல் 29 வரை இணையத்தள முறை மூலம் இந்த மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு கூறியுள்ளது.

புலமைப்பரிசில் மாணவர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு 2023ஆம் ஆண்டு தோற்றிய மாணவர்களுக்கான பாடசாலைகளை அனுமதிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பினை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதாவது, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 06இற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான மேன்முறையீடுகள் நாளை (13) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

2024 பெப்ரவரி 13 முதல் 29 வரை இணையத்தள முறை மூலம் இந்த மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு கூறியுள்ளது.

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk ஊடாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஊடாக ஆகக்கூடியதாக மூன்று பாடசாலைகளுக்கு மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், http://g6application.moe.gov.lk/ என்ற இணையத்தளத்தின் ஊடாக நேரடியாக முறையீடுகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.   

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT