கால்பந்தாட்ட போட்டியில் சன நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

எல் சல்வடோரில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் சன நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கால்பந்தாட்ட போட்டியில் சன நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

எல் சல்வடோரில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் சன நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள எல் சல்வடோர் நாட்டில் சல்வடோர் லீக் என்ற பெயரில் கால்பந்து தொடர் நடைபெற்று வரும் நிலையில் காலிறுதி சுற்று போட்டியில் அலியன்சா - எப்ஏஎஸ் மோதியிருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அந்நாட்டின் கஸ்கட்லன் நகரில் உள்ள மைதானத்தில் போட்டி நடைபெறவிருந்த நிலையில் போட்டியை காண மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

இதன்போது நுழைவாயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்ததோடு மூச்சு திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன் காரணாமாக கால்பந்து போட்டி இரத்து செய்யப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT