வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு

இந்தியத் தலைநகர் புது டெல்லியில் நடைபெற்ற IORA அமைச்சர்கள் மன்றக் கூட்டத்திற்கு இடையே, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்தியத் தலைநகர் புது டெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் Rim கூட்டமைப்பின் (IORA) 25ஆவது அமைச்சர்கள் மன்றக் கூட்டத்திற்கு இணையாக நடைபெற்ற இச்சந்திப்பில், IORA உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுக்களின் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த சந்திப்பு குறித்து அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

புது டெல்லியில் இடம்பெற்ற இம்மாநாட்டில் இலங்கைத் தரப்புப் பிரதிநிதிகளுக்குத் தலைமை தாங்கிச் சென்றுள்ள அமைச்சர் ஹேரத், பிராந்திய நாடுகளுடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் வலுவான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் இக்கூட்டங்களின்போது அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT