கன்னி ராசிக்கு செல்லும் சுக்கிரனால் நஷ்டப்படப்போகும் ராசிகள்!

சுக்கிரன் கன்னி ராசிக்கு ஆகஸ்ட் 25 ஆம் திகதி பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷடம் என்றால், சிலருக்கு பிரச்சனைகள் வீடு தேடி வரும். 

ஆகஸ்ட் 24, 2024 - 12:12
கன்னி ராசிக்கு செல்லும் சுக்கிரனால் நஷ்டப்படப்போகும் ராசிகள்!

சுக்கிரன் கன்னி ராசிக்கு ஆகஸ்ட் 25 ஆம் திகதி பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷடம் என்றால், சிலருக்கு பிரச்சனைகள் வீடு தேடி வரும். 

கன்னி ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது, பன்னிரெண்டு ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சிம்மத்தில் இருக்கும் சுக்கிரன் கன்னி ராசிக்கு மாறும்போது ஏற்படும் பலன்களை பார்க்கலாம்.

தற்போது சிம்ம ராசியில் சூரியனுடன் இணைந்து நல்ல பலன்களை நல்கிக் கொண்டிருக்கும் சுக்கிரன், இன்னும் நான்கே நாட்களில் சூரியனிடம் இருந்து பிரிந்து கன்னி ராசிக்கு செல்கிறார். சூரியனுடன் அருமையான ஜோடியாக இருந்த அவர், தற்போது சூரியனிடம் இருந்து விலகுவது சில ராசிகளுக்கு மோசமான பலன்களைக் கொடுக்கும்

சுக்கிரனின் தாக்கம் ஆக்கப்பூர்வமானதாக இருந்தால், லட்சுமி கடாட்சம் இருக்கும் என்றால், அதே சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் வலுவிழந்து இருப்பதுடன், மோசமான கிரக சேர்க்கையும் இருந்தால், மூதேவியின் சாயல் அந்த ராசிக்காரர்களின் வாழ்வில் படியும்

சிம்ம சுக்கிரனாக இருந்த சுக்கிர கிரகம், கன்னி சுக்கிரனாக மாறுவதால், அதிகம் பாதிக்கப்படப் போவது மேஷ ராசி தான். பண நட்டம் ஒரு புறம் என்றால், தொழிலில் சறுக்கல், உறவுகளிடன் சச்சரவு, குடும்பத்தில் குழப்பம் என மனதில் கவலைகள் அதிகரிக்கும்

கன்னிக்கு மாறும் சுக்கிரன், ரிஷப ராசியினருக்கு கவலைகளை அதிகரிப்பார். பண நஷ்டம், காரியத்தடை, குழந்தைகளால் பிரச்சனை என நிம்மதியை இழக்கச் செய்வார்

சிம்ம ராசிக்காரர்களின் ராசியில் இருந்து வெளியேறும் சுக்கிரன், வேலையில் அழுத்தத்தைக் கொடுப்பார். செய்யும் வேலைக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போவது, செய்தொழிலில் வேலையாள் பிரச்சனை, வாழ்க்கைத் துணையுடன் மனக்கசப்பு, வாக்குவாதங்கள் என நிம்மதி பறிபோகும்   

தொழில் ரீதியாக, திருப்தியின்மை, காரியத் தாமதம் என நிம்மதி பறிபோகும். திட்டமிட்ட வேலைகளை செய்ய முடியாமல் அதிருப்தி ஏற்படும். குடும்பத்தில் ஈகோ பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம் 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!