திருகோணமலை மாவட்டச் செயலாளர் கடமையை பொறுப்பேற்றார்

ஏற்கெனவே மாவட்டச் செயலாளராக கடமையாற்றிய பி.எச்.என்.ஜயவிக்ரம ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டச் செயலாளர் கடமையை பொறுப்பேற்றார்
ADVERTISEMENT
ADVERTISEMENT

திருகோணமலை மாவட்டமாவட்டச் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர சேவையை சேர்ந்த சாமிந்த ஹெட்டியாரச்சி, இன்று (27) தனது கடமையை பொறுப்பேற்றார்.

ஏற்கெனவே மாவட்டச் செயலாளராக கடமையாற்றிய பி.எச்.என்.ஜயவிக்ரம ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை நிர்வாக சேவை திறந்த பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட இவர், 2000 -2006ஆம் ஆண்டு வரை திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் உதவி செயலாளர், சிரேஷ்ட உதவிச் செயலாளர், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

(ஹஸ்பர்)

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT