உருவாகும் திரிகிரக யோகம்: நவம்பர் 17 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண மழை பொழியப்போகுது...
நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் புதன் விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து நவம்பர் 16 ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார்.

நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் புதன் விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து நவம்பர் 16 ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார்.
அதன் பின் நவம்பர் 17 ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசியில் நுழையவுள்ளார். இப்படி மூன்று கிரகங்களும் நவம்பர் 17 ஆம் தேதி விருச்சிக ராசியில் இருப்பதால், மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த யோக காலத்தில் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பெற்றோருடனான உறவு வலுவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த யோக காலமானது வரப்பிரசாதமாக இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் எதிர்பாராத பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் உயர்வு ஏற்படவுள்ளது. நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை சற்று அதிகமாக இருக்கும். இக்காலகட்டத்தில் பழைய நண்பர்களின் உதவியால் பெரிய பிரச்சனை ஒன்று தீர்க்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)