இன்றைய ராசிபலன் - Today Rasi Palan - 9 June 2025

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான 9 June 2025 இன்றைய பலன்கள்.

இன்றைய ராசிபலன் - Today Rasi Palan - 9 June 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேஷம் : அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் மட்டும் கவனமாக இருப்பது நலம். தம்பதிகள் சுப நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்து கொள்வது நல்லது. வழக்கில் திருப்பம் ஏற்படும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் இயற்கை மருத்துவத்தால் சரியாகும். அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

ரிஷபம் :  காதலர்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். சுப காரியம் கைகூடும். எதிர்பாலினரிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ADVERTISEMENT
ADVERTISEMENT

மிதுனம் :  வியாபாரிகளுக்கு தாங்கள் நினைத்த ஒரு வியாபாரம் கைகூடி வரும். உத்யோகஸ்தர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். யாரிடமும் அதிகமாக பேசுவதை தவிர்ப்பது பல பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வழிவகுக்கும். தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும். உடல் நலம் பளிச்சிடும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம் :  காதலர்கள் தங்கள் பொறுப்பினை உணர்வார்கள். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்து போகும். உத்யோகத்தில் வேலைபளு மிகும் மாணவர்கள் திட்டமிட்டு படிப்பர். அலைச்சல் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

சிம்மம் :  உணவு விசயத்தில் கவனம் தேவை. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சமூகம் மற்றும் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பெண்கள் கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். பெண்கள் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ADVERTISEMENT
ADVERTISEMENT

கன்னி : எதிர்பார்க்காத நல்ல செய்தி வந்து சேரும். கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். அரசியலில் ஆர்வம் மிகும். பணப் புழக்கம் மிகும். பயணத்தின் போது கவனம் தேவை. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சமையற்கலையில் ஆர்வம் கூடும். மாணவர்களின் மதிப்பெண் விகிதம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்

துலாம் :  நண்பர்கள் எதிர்பார்த்த உதவியை பூர்த்திச் செய்துக் கொடுப்பீர்கள். உத்யோகஸ்தர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். மாணவர்கள் விளையாட்டுத் துறையில் வெற்றிகளை குவிப்பர். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம் :  இனி குறுகிச் சென்ற நீங்கள் இனி செல்லும் இடமெல்லாம் செல்வாக்கு கூடும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

தனுசு :  கணவர் வீட்டார் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதரர்களிடையே நிலப்பிரச்னைக்கு சமரசத் தீர்வு காண்பர். வழக்கில் தங்களுக்கு முக்கியமான திருப்பம் ஏற்படும். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மகரம் :  இழுபறியாக இருந்த வீட்டு மனை வாங்குவது, விற்பது தொடர்பான விசயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையும். திருமணம் கைகூடும். ஏற்ற துணை அமைவார். பொது நலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம் :  நவீன வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டிட வரைபடமும் அப்ரூவலாகும். தாய்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். பெண்களுக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம் :  இன்று சந்திராஷ்டமம் என்பதால் பல காரியதடைகள் ஏற்படும். ஆகையால், புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT